Latestஉலகம்

சிங்கப்பூர் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் இல்லை

சிங்கப்பூர், மார்ச் 25 – கோவிட்–19 வைரஸ் தொற்று நெருக்கடியை சிங்கப்பூர் எதிர்நோக்கிய போதிலும் அந்நாட்டின் பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படாமல் திட்டமிட்டபடி நடைபெறும் என கூறப்படுகிறது. இப்போதைய நெருக்கடியான காலக்கட்டத்தில் வலுவான தலைமைத்துவம் தேவைப்படுவதால் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாக சிஙகப்பூர் அரசாங்கம் கூறியுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கு முன்னதாக சிங்கப்பூர் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் இப்போதைக்கு தேர்தல் நடத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல என சிங்கப்பூர் எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் கூறியுள்ளனர்.

கோவிட் 19 வைரஸ் தொற்று இன்னும் சில காலம் நீடிக்கும் என்பதால் நாடு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடியும் என மூத்த அமைச்சர் தியோ சீ ஹியன் தெரிவித்தார்,

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!