Latestமலேசியா

சாலையில் கிடந்த டயரை அகற்ற முயன்ற ஆடவரின் நல்ல எண்ணம் சோகத்தில் முடிந்தது

சுங்கை பூலோ, ஜன 23 – சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்பிற்காக சாலை நடுவே விழுந்துக் கிடந்த டயர் பாகத்தை அகற்ற முயன்ற ஆடவர் ஒருவரின் நல்ல எண்ணம் சோகத்தில் முடிந்துள்ளது.

அந்த டயரை அகற்ற சாலை நடுவே இருந்த அந்த ஆடவரை எதிரே வந்த லோரி கட்டுபாட்டை இழந்து மோதியதில் அந்த ஆடவர் தூக்கி எறியப்பட்டு மரணமடைந்தார்.

இச்சம்பவம் ரவாங்கிலிருந்து சுங்கை பூலோவை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

பேராக் செமோரை சேர்ந்த 64 வயது முகமட் நோர் ஷஹாரி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

தனது நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த அவர், சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் சாலையின் நடுவே சென்று டயர் பாகத்தை அகற்ற முயன்றதாகவும் . சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது அவர் மோதபட்டதாகவும் இறந்தவரின் நண்பர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!