Latestஉலகம்

சத்தியபிரமான பிரகடனம் : எனக்கு எதுவும் தெரியாது டாக்டர் மகாதீர்

லங்காவி, பிப் 14 –  இந்த தவணை முடியும்வரை தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டுமென அரசியல் வேறுபாடு இன்றி இரண்டு தரப்பையும் சேர்ந்த 138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள எழுத்துப்பூர்வமான சத்திய பிரமான பிரகடனத்தின் சட்டப்பூர்வ தன்மை குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த சத்திய பிரமான பிரகடனம் குறித்து எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. 138பேரின் கையெழுத்துக்களை எப்படி பெற்றனர் என்பதும் தமக்கு வியப்பாக இருப்பதாக அவர் சொன்னார்.

இன்று நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையை கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் அவர்களுக்கு 138பேரின் கையெழுத்து எப்படி கிடைத்திருக்கும் என்றும் மகாதீர் வினவினார். இதற்கு பின்னால் யாரோ செயல்பட்டிருக்ககூடும்.

எப்படி இது நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இது உண்மையாக இருந்தால் நம்பிக்கை கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டிருக்கலாம் என மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனக்கு ஏற்கனவே 94 வயதாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் எனக்கு 95 வயதாகிவிடும். இன்னும் நீண்ட நாள் எப்படி என்னால் வேலை செய்ய முடியும் என்றும் அவர் வினவினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!