Latestமலேசியா

சட்டவிரோத பண பரிமாற்றம் மீதான குற்றச்சாட்டு: ஷாரிர் அப்துல் சமாட் – அகமட் மஸ்லான் கைது

கோலாலம்பூர், ஜன 20 – பெல்டாவின் முன்னாள் தலைவர் ஷாரிர் அப்துல் சமாட் மற்றும்  அனைத்துலக வாணிக தொழில்துறை  முன்னாள் அமைச்சர்  அகமட் மஸ்லான்  ஆகியோரை  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி இன்று கைது செய்துள்ளது .  பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவ்விருவர் மீதும் இன்று  சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டு  கொண்டுவரப்படும் என  எம்.ஏ.சி.சி கூறியது.

கோலாலம்பூர் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம், பயங்கரவாத  எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத  நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட ஆதாயம் ஆகிய  குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு  எதிராக  நாளை கொண்டுவரப்படும் என எம்.ஏ.சி.சி  கூறியது. எனினும் இது தொடர்பான மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.

1எம்.டி.பி   தொடர்பான  நிதியை பெற்றதாக கடந்த அக்டோபர் மாதம் ஷாரிர்  மற்றும் அகமட் மஸ்லான் உட்பட  80 தனிப்பட்ட நபர்களுக்கு குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டன. இரண்டு வாரங்களுக்குள் அப்பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் அல்லது அந்த குற்றப்பதிவு அறிக்கைகளுக்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கும்படி அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

அந்த குற்றப்பதிவுகளுக்கு எதிராக  அவர்கள்  சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.  அந்த மனுவில் எம்.ஏ.சி.சியின் தலைவர்  லத்திபா கோயாவை பிரதிவாதியாக அவர்கள் பெயர் குறிப்பிட்டிருந்தனர்.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!