Latestமலேசியா

சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் உட்பட நால்வர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்

கோலாலம்பூர், ஜன 20 – தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை தொடர்புப்படுத்தி உயர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை மலாக்கா காடேக் டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் , தொழில்நுட்பாளர் எஸ்.அறிவேந்தன், கடிதப்பட்டுவாடா பணியாளர் எஸ்.தீரன் மற்றும் ஆசிரியர் ஆர்.சுந்தரம் ஆகியோர் மறுத்து விசாரணை கோரினர்.

உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு நீதிபதிகள் முன்னிலையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது. சாமிநாதன், தீரன் மற்றும் சுந்தரம் ஆகியோர் மீது தலா ஒரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. தண்டனைச் சட்டத்தின் 130JB (1) (a) விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஏழு ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். முகநூல் மூலமாக அறிவேந்தன் மற்றும் தீரன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோர் 5 மற்றும் 8ஆம் தேதிகளில் மாலை 9மற்றும் 10 மணிக்குமிடையே புக்கிட் அமான் பயங்கரவாத துடைதொழிப்பு பிரிவின் அலுவலகத்தில் அவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அதே வேளையில் கடந்த 2018ஆம் ஆண்டு மலாக்கா ஆயர் குரோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக சாமிநாதன் மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இரவு 8.30 மணி மற்றும் இரவு மணி 10.50க்கிடையே அவர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

தீரனுக்கு எதிரான குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம்தேதி வரையிலும் பின்னர் 10,14,15,17 மற்றும் 21ஆம் தேதி முதல் 24ஆம தேதிவரை நடைபெறும்,. அதே வேளையில் சாமிநாதன் மீதான வழக்கு விசாரணை அக்டோபர் 5ஆம் தேதி முல் 8ஆம தேதியிலும் பிறகு அக்டோபர்1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும் மேலும் அக்டோபர் 19 மற்றும் அக்டோபர் 22ஆம் தேதியும் நடைபெறும்.
அறிவேந்தன், சாமிநாதன் மற்றும் சுந்தரம் ஆகியோரின் சார்பில் வழக்கறிஞர் ஹர்ஷான் ஷமானி ஆஜராகினார். வழக்கறிஞர் ராஜேசேகரன் கலைமுகிலன் மற்றும் தீரனுக்காக ஆஜராகினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!