
கோலாலம்பூர், நவ 25 – நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கொண்டுவரப்பட்ட வழக்கு மனுவுக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் தோமி தாமஸ் செய்திருந்த மேல்முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் தந்தை செய்துகொண்ட வழக்கு மனுவை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தோமி தோமசின் முறையிட்டை நிராகரிக்கும்படி முகமட் காசிம் தாக்கல் செய்திருந்த சிவில் வழக்கு தவறானது என நீதித்துறை ஆணையர் மியோர் ஹசிமி அப்துல் ஹமிட் தெரிவித்தார். அவமதிப்பு வழக்கு குற்றவியல் நடவடிக்கையின் கீழ் வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு முகமட் காசிம் அவமதிப்பு வழக்கை தொடர்வதற்கு அனுமதி வழங்கிய மரண விசாரணை நீதிபதி ரொபியா முகமட்டின் முடிவுக்கு எதிராக தோமி தாமஸ் செய்திருந்த முறையீடு மீதான விசாரணை டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் மியோர் ஹசிமி தெரிவித்தார்.
தோமி தாமஸின் சார்பில் வழக்கறிஞர் ஸைநுர் ஸாக்கரியா மற்றும் வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் ஆஜராகினர்.