Latestமலேசியா

கோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை

ஜோர்ஜ்டவுன், டிச 9 –  இஸ்லாமிய பெண்மணி ஒருவர் சாரி மற்றும் தூடுங்குடன்  கோவிலில் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பல்வேறான விமர்சனங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு விட்டதாகவும் இதனை பெரியபடுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் பினாங்கு மாநில இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.

அந்த மலாய் பெண்மணியின் கணவருக்கு இவர் இரண்டாவது மனைவியாவார். அந்த ஆடவரின் முதல் மனைவியும் பிள்ளைகளும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களாவர். அந்த கணவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார்.
தற்போது முதல் மனைவி உயிருடன் இல்லை. முதல் மனைவியின் பிள்ளைக்குதான் இந்த நிச்சயத்தார்த்தம் நிகழ்வு கோவிலில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட புகைப்படங்கள்தான் சமூக வலைத்தளத்தில் பரவி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விவகாரத்தை விசாரிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!