Latestஉலகம்

கோவிட் 19 வைரஸ் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது

பெய்ஜிங்,  பிப் 14 –  இதற்கு முன் கொரோனா வைரஸ் என அழைக்கப்பட்டு தற்போது கோவிட் 19 என பெயர் மாற்றம் செய்யப்பட இந்த உயிர்க்கொல்லி நோயினால் சீன பெருநிலத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை 1,489ஆக அதிகரித்துள்ளது .

சீனாவிற்கு வெளியே ஹங்காங், பிலிப்பின்ஸ் மற்றும் ஜப்பானிலும் தலா ஒருவர் என மூவர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவுவரை பெரிய அளவில் கோவிட் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஹூபேய் மாநிலத்தில் புதிதாக 116பேர் மரணம் அடைந்தனர்.

இதுதவிர கோவிட் 19 வைரஸ் புதிதாக 4,823பேருக்கு தொற்றியிருப்பதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமையன்று மட்டும் அதிக அளவில் 242பேர் மரணம் அடைந்தனர்.. தற்போது சீனா முழுவதிலும் 64,658பேர் கோவிட் 19 வைரஸ்ஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீன அதிகாரிகள் கூறிவரும் தகவலைவிட கோவிட் 19 பாதிப்பு அந்நாட்டில் மிகவும் மோசமாக இருக்க்க்கூடும் என கூறப்படுகிறது .

ஜப்பானில் 251பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமன்ட் பிரின்ஸ்ஸ் கப்பலைச் சேர்ந்தவர்களாவர். சிஙகப்பூரில் 58பேர் கோவிட் கிருமியின் இந்த வைரஸினால் பாதிக்க்ப்பட்டனர். இந்த வைரஸ் சீனாவுக்கு வெளியே 28 நாடுகளில் பரவியுள்ளது.

இதனிடையே ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள உல்லாச கப்பலில் உள்ள இந்தியர்களில் இருவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றியிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமது டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் அந்த உல்லாச கப்பலின் பணியாளர்கள் மற்றும் பயணிகளிடம் தொடர்பில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலின் பயணிகளும் கப்பல் ஊழியர்களும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!