Latestமலேசியா

கோவிட் 19 வைரஸ் : மரண எண்ணிக்கை 1,500 தாண்டியது

பெய்ஜிங் பிப் 15 சீனாவில் கோவிட் 19 வைரஸ் தொடர்ந்து மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று காலை தொடங்கி நள்ளிரவுவரை ஹூபேய் மாநிலத்தில் 139க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். இதன்வழி இதுவரை இந்த வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 1,519ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர புதிதாக 2,420பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் கோவிட் 19 வைரஸ் ஹூபேய் மாநிலத் தலைநகர் வூஹன் நகரில் பரவத் தொடங்கியது முதல் அங்கு தினசரி சராசரி 100க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் கோவிட் 19 வைரஸ் தாக்கம் மோசமடைந்து வருவதை மரணம் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடிவதாக சீன சுகாதார அதிகாரிகள் கூறினார். சளி, காய்ச்சல் மற்றும் தும்மல் மூலம் பரவக்கூடிய கோவிட் 19 வைரஸ் உடலின் சுவாச செயல்பாட்டையும் உடலின் இதர உடல் உறுப்புக்களையும் பாதிக்கச்செய்யும் என்பதால் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதில் சீன சுகாதார அதிகாரிகள் பல்வேறு செயல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது சீனா முழுமையிலும் 66,000த்திற்கும் மேற்பட்டோர் கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஹூபேய் மாநிலத்திலுள்ள எஞ்சிய மலேசியர்களை நாட்டிற்கு கொண்டுவரும் இரண்டாவது திட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் 19 வைரஸ் கிருமியின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள வூஹன் நகரில் இன்னமும் 100 மலேசிய பிரஜைகளும அவர்கள் மனைவிமார்கள் மற்றும் பிள்ளைகளை விமானத்தின் மூலம் ஏற்றிவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இம்மாதம் 24ஆம் தேதி அவர்களை இங்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாடு திரும்புவதற்கு தயாராய் இருக்கும்படி வூஹனிலுள்ள மலேசியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். விரைவில் இது குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெயிடும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!