Latestமலேசியா

கோவிட் -19 வைரஸ் தொற்று மேலும் இருவர் பலி ; மரண எண்ணிக்கை 37ஆகியது

கோலாலம்பூர். மார்ச் 30 – கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும இருவர் மரணம் அடைந்தனர். இதன் வழி இந்த உயிர்க் கொல்லியினால் மலேசியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது. மரணம் அடைந்த 36ஆவது நபருக்கு வயது 47. இத்தொற்று கண்டவுடன் மார்ச் 23ஆம் தேதி சரவா பொது மருதுவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் இன்று காலை மணி 8,10க்கு மரணமடைந்தார்.

இன்று மரணம் அடைந்த இரண்டாவது நபர் 46 வயது பெண் ஆவார். இவருக்கு இரத்த அழுத்தம் உட்பட இதர கடுமையான நோயும் இருந்தன. சரவா மிரி மருத்துவமனையில் காலை மணி 9,02க்கு அவர் உயிரிழந்தார்.

இதுதவிர புதிதாக 156பேர் இந்த தொற்றுக்கு உள்ளானதால் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,626 ஆகியது. சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் நோர் ஹிஷாம் அப்துல்லா இதனைத் தெரிவித்தார். 91 பேர் குணமடைந்தனர். இதுவரை முழுமையாக குணமடைந்து 479பேர் வீடு திரும்பியதாகவும் அவர் சொன்னார்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!