Latestஉலகம்

கோவிட்-19 வைரஸ் அதிகமான உயிர் இழப்பை ஏற்படுத்தும் – உலக சுகாதார நிறுவனம்

கோவிட்-19 வைரஸ் உலகளாவிய தொற்று நோய் என்றும் இந்த உயிர்க்கொல்லி மேலும் அதிகமான உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் என்றும்  உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கோவிட்-19  வைரசுக்கு உலகம் முழுவதிலும் 4,00க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.

மேலும், 1 லட்சத்து 21ஆயிரத்தும் மேற்பட்டோர் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஜெனிவாவில் நடைப்பெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனை கூட்டத்தில் அதன் தலைவர்  Tedros Adhnanom  தெரிவித்தார். கோவிட்-19 வைரஸ் மற்றும் அதன் வீறிய தன்மை மிகவும் ஆபத்தாக உள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள்  தீவிரம் காட்டாதது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!