Latestஇந்தியா

கோவிட் வைரஸ் 19 இருப்பதாக பயந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி

சித்தூர், பிப் 13 – ஆந்திராவின் சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த் விவசாயி ஒருவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் கொரோன வைரஸ் தான் என தவறாக புரிந்துக் கொண்டு, தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

54 வயது, பாலகிருஷ்ணையா என்பவர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக தொற்று தாக்கப்பட்டதால் காய்ச்சலுக்கு உள்ளானதாக மருதுவர்கள் கூறினர். அதற்கு ஏற்ற மருந்துகளை கொடுத்த முககவசம் அணியும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இந்நிலையில், திருப்பதியில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்ற போதுதான் பாலகிருஷ்ணையா வாழ்க்கையில் புயல் வீசியது.

அங்குதான் கோவிட் 19 பற்றிய செய்திகள், உயிரிழப்புகள் போன்றவை குறித்து செய்திகளை பார்த்து அதிர்ந்தார்.  அதனால் தனக்கும் கொரோனா வந்துவிட்டதாக  பயந்து  குடும்பத்தினர் யாரையும் பார்க்க மறுத்தார் ; தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவரின் பிள்ளைகள் கோவிட் 19 பற்றி எடுத்துக் கூறியும் அவர் கேட்க வில்லை. தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு, இரவு நேரத்தில் வீட்டு பக்கத்தில் இருந்த மரத்தில் பாலகிருஷ்ணையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!