Latestமலேசியா

கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் கலைக்கட்டிய பொங்கல் வைபவம்

கோலாலம்பூ, ஜன 15 – உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் நாளாக விளங்கும் பொங்கல் திருநாள், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மிக விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வருடப் பொங்கல் திருநாள் இன்று புதன்கிழமை, வேலை நாளன்று அனுசரிக்கப்படுவதால், பொதுவிடுமுறை இல்லை என்றாலும் பெரும்பாலானோர் அதிகாலையிலே எழுந்து காலையில் குடும்பத்தினருடன் வீட்டில் பொங்கல் வைத்து, இறைவனை வழிப்பட்டுவிட்டு, வேலைக்குச் செல்லும் முன் ஆலய தரிசனத்திற்கு சென்றனர் பக்தர்கள்.

அந்த வகையில், மலேசியாவின் பிரசித்திப்பெற்ற கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் பொங்கல் வைபவம் மிக கோலாகலமாக கொண்ட்டாப்பட்டது. 100 கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே ஆலயத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர்.தொண்று தொட்டு கொண்ட்டாப்பட்டு வரும் இந்த தைப்பொங்கல் தமிழர் திருநாள், இன்று விவசாயமும் மாடுகளும் அரிதாகிவிட்டாலும் அதன் அடிப்படை மகத்துவம் மாறாமல் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு காலையில் இருமுறையும் மற்றும் மாலை நேரம் ஒரு முறையும் மொத்தம் 3 நேரங்கள் பொங்கல் வைப்பதற்கான நேரமாக கணிக்கப்பட்டிருந்தது. எனவே விடுமுறை எடுக்க முடியாதவர்கள் பலர், வேலை முடிந்து மாலையில் வீட்டில் பொங்கல் வைப்பதற்கும் ஏதுவாக இவ்வாண்டு பொங்கல் வைபவம் அமைந்திருந்தது. நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், பொங்கல் வைக்கும் வைபவமும் நடைப்பெற்றன.

சமீப காலமாக, இந்த பொங்கல் கொண்டாட்டம் மிகப்பெரிய அளவில் பல்வேறு மதத்தினர், இனத்தினர், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு ஒற்றுமை பண்டிகையாகவும் உருவெடுத்துள்ளது. இதற்கு, சமூக ஊடகங்களின் பங்களிப்பும் அளப்பறியது.

அவ்வப்போது எழும் இன ரீதியிலான பிரச்சனைகளால் சில சலசலப்புகள், மனக்கசப்புகள் எழுந்து வந்தாலும், இத்தகைய கொண்டாட்டங்கள் ஒற்றுமையை மேலும் மேம்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.

மலேசியாவை பொறுத்த மட்டில், இயற்கைக்கு நன்றி கூறும் நாளான இன்று, எண்ணிய காரியத்தை தொடங்கும் நாளாகவும், தமிழர் பண்பாட்டு விழாவாகவும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருவது சிறப்பு அம்சமாகும்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்…

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!