Latestமலேசியா

கோமாவிலிருந்து விழித்தவருக்கு அடித்த ரிம23 மில்லியன் லோட்டரி அதிர்ஸ்டம்

பெட்டாலிங் ஜெயா, ஜன 16 –   விபத்தில் சிக்கி கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு, வேலை இழந்து கடன் தொல்லைகளில் சிக்கிக் கொண்ட  லோரி ஓட்டுனர் ஒருவருக்கு டோட்டோ 6/58 ஜேக்போட் லாட்டரியில்  23 மில்லியன் ரிங்கிட் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கடந்த ஜனவரி 12ஆம் தேதி 29 வயது ஆடவருக்கு அந்த அதிர்ஷ்ட லோட்டரி அடித்துள்ளது.  ஒரு கோர விபத்துக்கு பின்னர் இந்த அதிர்ஷ்டம் அடித்திருப்பது கடவுளின் ஆசிர்வாதம் என அந்த ஆடவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கிடைக்கப்பெற்ற இந்த தொகையைக் கொண்டு வசதி அற்றவர்களுக்கு உதவ போவதாகவும், தனது கடன்களை அடைத்துவிட்டு வீடு ஒன்றை வாங்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அம்மாவுக்கும் வேலையிலிருந்து விடைக் கொடுத்து, அவருக்கு ஓய்வு கொடுக்கப்போவதாகவும் அந்த அதிர்ஸ்டசாலி ஆடவர் கூறியுள்ளார்.
இவருக்கு அடித்துள்ள இந்த அதிர்ஸ்டத்தைக் கண்டு சமூக வலைத்தளவாசிகள் அவருக்கு பாராட்டுகளையும், தங்களின் ஏக்கத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!