Latestமலேசியா

கொரோனா வைரஸ் ; இந்திய பிரஜை மலேசியாவில் மரணமா? – சுகாதார அமைச்சு மறுப்பு

கோலாலம்பூர், ஜன 31  – கொரோனா வைரஸ் கிருமியினால் 31 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் மலேசியாவில் மாண்டதாக வெளியான தகவல் பொய்யானது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இந்த வைரஸ் தொர்பாக மருத்துவ பரிசோதனையை கையாண்ட தனது ஆய்வுக்கூட அறிக்கையில் இந்தியப் பிரஜை எவரும் இல்லையென சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 30ஆம் தேதி மாலை 6 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இடம்பெற்றுள்ள பட்டியலில் சம்பந்தப்பட்ட அந்த இந்தியப் பிரஜை குறித்த விவரம் எதுவும் இல்லை என்பதோடு இந்தியப் பிரஜை ஒருவருக்கு கொரோனாஸ் வைரஸ் கிருமியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் எதனையும் சுகாதார அமைச்சு பெறவில்லையென்றும் கூறப்பட்டது.

புதன்கிழமையன்று மலேசிய அதிகாரிகள் அந்த இந்தியப் பிரஜையின் தாத்தாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 23 வயதுடைய அவரது பேரன் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துவிட்டர் என்று தெரிவித்தாக இந்திய இணையத்தள பதிவேடு ஒன்று செய்தி வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!