Latestமலேசியா

குளிருக்கு இதமாக கார் இயந்திரத்தில் ஓய்யாரமாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு; பினாங்கில் சம்பவம்

பிறை, டிச 17- தற்போது நாடெங்கிலும் மழைக்காலமாக இருப்பதால் மலேசியர்கள் அனைவரும் கடும் குளிரான வானிலையை எதிர்நோக்கியுள்ளனர். இதனால், குளிரைப் போக்குவதற்காக மலேசியர்கள் வெப்பமான சூழலில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கிறோம்.

குளிரால் வாடுவது மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும்தான்.  அண்மையில், காரின் முன்புற ஹூட்டை திறந்தபோது, அதனுள் குளிருக்கு இதமாக மலைபாம்பு ஒன்று இயந்திர சூட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனைக் கண்ட காரின் உரிமையாளர் உடனே பொது தற்காப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்த அவர்கள் ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பாம்பை பிடித்துச் சென்றனர். இச்சம்பவம் பினாங்கு பிறையில் நடந்ததாக தெரிகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!