Latestமலேசியா

குற்றம் நடந்த அறை மறு வடிவம் செய்யப்பட்டது

கோலாலம்பூர்.  டிச. 3 – கிரடல் நிதி நிறுவனத்தின் தலைமை  செயல் அதிகாரி நஸ்ரின் ‌‌‌‌‌‌ஹசான்  தங்கியிருந்த அறையில் பெட்ரோல் கசிவு  மாதிரியை தீ மற்றும் மீட்பு துறையின் விசாரணை ஆய்வுக்கூடம் கண்டறிந்ததைத்  தொடர்ந்து குற்றம் நிகழ்ந்த இடத்தை மறுவடிவம் அல்லது மறு நிர்மாணிப்பு செய்யும்படி தமக்கு பணிக்கப்பட்டதாக தீயணைப்பு படையின் விசாரணை அதிகாரி அப்துல் ஹலிம்  சுல்கிப்லி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நஸ்ரின் படுக்கையறையின் மெத்தையில் பிளாக்பெரி கைத்தொலைபேசி மற்றும் ஹேவாவே கைத்தொலைபேசிகளை தாம் கண்டதாக நஸ்ரி  ஹசான் கொலை வழக்கில் 15ஆவது சாட்சியான அப்துல் ஹலிம்   தெரிவித்தார். அந்த இரண்டு கை தொலைபேசிகளும் நல்ல நிலையில் இருந்ததாகவும் அவர் சொன்னார்.

கைத்தொலைபேசிகளில் வெடிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அந்த கைத்தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதன் அமைப்பு நல்ல நிலையில் இருந்ததாகவும் அவர் சொன்னார்.

ஹூவாவே கைத்தொலைபேசியும் நல்ல நிலையில் தான் இருந்தது என சிலாங்கூர் குற்றவியல் இயக்குனர் சலிம் போய்ப் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றுவரும் நஸ்ரின் கொலை வழக்கு விசாரணையில் அப்துல் ஹலிம் சாட்சியமளித்தார். இதனைத்தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த அந்த அறையை மறுநிர்மாணிப்பு செய்யும்படி தாம் கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!