Latestமலேசியா

இந்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் முரண்பாடு ஏன் ? கஸ்தூரி பட்டு கேள்வி

கோலாலம்பூர், பிப் 6 –  ஜோகூர் டாருல் தாஷிம் ( Johore Darul Tazim) காற்பந்து குழுவின் LIRIDON KRASNIQI ( லிரிடோன் கெரஸ்னிகி) என்பவர் வெளிநாட்டினராக இருந்தும் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்துவரும் பலர் இன்னும் நாடற்றவர்களாக இருந்துவருகின்றனர். எனவே குடியுரிமை வழங்குவதில் ஏன் இந்த முரண்பாடு என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

கொசோவைச் சேர்ந்த காற்பந்து விளையாட்டாளரான கெரஸ்னிகி 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் மலேசியா வந்துள்ளார்.எனவே அந்த வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கியது அரசியல்மைப்பு சட்டத்திற்கு எதிரானது என இன்று வெளியிட்ட அறிக்கையில் கஸ்தூரி தெரிவித்தார். குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யும் தேதிக்கு முன்னதாக 12ஆண்டுகள் இங்கு இருந்திருக்க வேண்டும். அவற்றில் குறைந்தபட்டசம் 10 ஆண்டுகளாவது அவர் இங்கு தஙகியிருக்க வேண்டும் என்பதை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 19 (3) ஆவது பிரிவு குறிப்பிடுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் குடியுரிமைக்கான அந்த வெளிநாட்டினரின் விண்ணப்பம் திரைமறைவைச் சேர்ந்தவர்களால் மின்னல் வேகத்தில் பரிசீலிக்கப்பட்பட்டுள்ளதாக கஸ்தூரி தெரிவித்தார். கெரஸ்னிகிக்கு என்ன காரணம் அல்லது அவசரம் இருந்தாலும் இனி அவரை மலேசியர் என்று கூறமுடியும். அவசரம் அவசரமாக குடியுரிமை கிடைக்கப்பெற்றதில் அவர் முதல் நபர் அல்ல. ஏற்கனவே RAGAE WALEED ALKURDI சுழல்காற்று வேகத்தில் ஆறு ஆண்டுகளுக்குள் குடியுரிமை வசதியை விரைவாக பெற்றதோடு 13ஆவது பொதுத் தேர்தல் மற்றும் 2016ஆம் ஆண்டு சரவா மாநில சட்டமன்றம் தேர்தலிலும் வாக்களித்துள்ளார். சிரியாவைச் சேர்ந்த RAGAD சரவா கவர்னர் அப்துல் தாய்ப் மாமுட்டின் துணைவியார் ஆவார்.

குடியுரிமை வழங்குவதில் ஒரு சிலருக்கு காட்டப்படும் அவசர வேகத்தை பார்க்கும்போது இங்கேயே பிறந்தவர்களுக்கான விண்ணப்பங்களில் மட்டும் ஏன் முரண்பாடு காட்டப்படுகிறது என கஸ்தூரி வினவினார். கெரஸ்னிகியின் குடியுரிமைக்கான விண்ணப்பம் ஒரு சாதனை நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்ற நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து குடியுரிமைக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான மற்ற விண்ணப்பதாரர்கள் மலேசியர்கள் என்ற தகுதியை பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர் என்பதால் இந்த நடைமுறையும் அக்கரையும் அவர்கள் விவகாரத்திலும் காட்டப்படுமா என்ற கேள்வியும் கஸ்தூரிபட்டு எழுப்பியுள்ளார்.

இதனிடையே கெரஸ்னிகிக்கு மின்னல் வேகத்தில் குடியுரிமை வழங்கப்பட்டது குறித்து சைமோன் சியா மற்றும் ஜெயசீலன் அந்தோனி ஆகிய இரண்டு வழக்கறிஞர்களும் குறைகூறியுள்ளனர். கெரஸ்னிகி இப்போது நாட்டின் பிரஜையாகி விட்டதால் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் அங்கீகரித்தால் அவர் மலேசிய காற்பந்து குழுவிற்கும் விளையாட முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!