Latestமலேசியா

குடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்

கோலாலம்பூர் நவ 21 – சைபர் ஜெயாவிலுள்ள அலுவலக கட்டிடத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின்போது இணய‌ மோசடி கும்பலைச் சேர்ந்த சீன பிரஜைகள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்தனர்.
பரிசோதனை நடவடிக்கையின் போது விஸ்மா முஸ்தபா கமால் அலுவலக கட்டிட பகுதியிலிருந்து சீன பிரஜைகள் கீழே கீழே குதிப்பது கீழே குடிப்பதற்காக தொங்கிக்கொண்டிருக்கும் காணொளி காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டது.
அவர்களில் ஒருவரை குடிநுழைவு அதிகாரி தரையில் மல்லுக்கட்டு வதையும் பார்க்க முடிந்தது. சீன பிரஜைகள் நடத்திவரும் இணைய மோசடி கும்பலுக்கு எதிராக குடிநுழைவு துறை இந்த சோதனையை மேற்கொண்டது.
27 பெண்கள் உட்பட 680 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதோடு 8,230 கைத்தொலைபேசிகள் 174 மடிக்கணினிகள், ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது சீன பிரஜைகள் தங்களது நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
சிலர் குடிநுழைவு அதிகாரிகளை தாக்குவதற்கு முயன்றனர் .இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுமார் 100 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக  குடிநுழைவு துறையின்  தலைமை இயக்குனர் ஸைமி  டாவுட் தெரிவித்தார்.
தப்பியோட முயன்றவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களில் பலர் காயமடைந்ததாகவும் அவர் சொன்னார்.மாதத்திற்கு 3 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி வாடகைக்கு எடுக்கப்பட்ட அலுவலக கட்டிடத்திலிருந்து
கடந்த ஆறு மாத காலமாக இந்த கும்பல் இணைய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது.
இந்த அலுவலகம் வாடிக்கையாளர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உள்ளவர்களை மோசடி செய்யும் இலக்கை கொண்டு விசா கட்டணம் அல்லது சீன பொருளகங்கள் மூலம் பண பரிமாற்றத்தை பெறுவதற்கான நடவடிக்கையிலும் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.
இந்த மையத்தில் பாதுகாவலர்களும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் பாதுகாப்பு கார்டை பயன்படுத்தி உள்ளே செல்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
கைது செய்யப்பட்டவர்கள் சமுக விசாவின் மூலம் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்வதோடு இவர்களிடம் கடத்தல் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் டாவுட் தெரிவித்தார் .இந்த விவகாரம் தொடர்பில் சீன தூதரகத்துடன் தொடர்புகொள்ள பட்டிருப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!