Latestமலேசியா

கிளந்தான் மெந்தரி பெசார் “ஒரு மனிதரே, அவர் தேவதூதர் அல்ல” – காடீர் ஜாசின்

கோலாலம்பூர், ஜன 18 – 6 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய எஸ்- கெலாஸ் மெர்சிடீஸ் பென்ஸ் காரை கிளந்தான் மந்திரி பெசாரும் அவரது ஆட்சிக் குழு உறுப்பினர்களும் அதிகாரப்பூர்வ வாகனமாக வாங்கியுள்ளது பலரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், கிளந்தான் மெந்தரி பெசார் அஹ்மாட் யாக்கோன்ப்பும் “ஒரு மனிதரே, அவர் தேவதூதர் அல்ல”. அதனால் அவர் செய்தது குற்றமல்ல என கிண்டலாக கூறியுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் காடீர் ஜாசின்.

ஒருவர் அணியும் நீள் உடல் அங்கியும், தலை அங்கியும் மகத்துவ கலாச்சாரத்தையும் அறிவாளிதனத்தையும், மனிதாபிமான உணர்வையும் பிரதிபலித்திடும் என அர்த்தமாகாது.

கிளந்தான் மக்களின் ஏழ்மை, போதைப் பொருள் அடிமை, விவகாரத்து போன்ற புள்ளி விபரங்கள் தீபகற்ப மலேசியாவிலேயே அதிகம் என காட்டினாலும் அது பற்றி கவலைப்பட வேண்டாம்.
இவ்வுலக வாழ்வு நிரந்தரம் இல்லாதது. இவ்வுலகில் நீங்கள் கஷ்டப்பட்டாலும் அடுத்த உலகில் மகிழ்ச்சியாக இருப்பிர்கள் என்றே சமய போதகர்கள் ஏழை மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

ஆனால். கெளாந்தான் மந்திரி பெசாரும், ஆட்சிக் குழு உறுப்பினர்களும் இவ்வுலகிலேயே கஷ்டமின்றி மகிழ்ச்சியாக வாழ முற்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக பிரதமரின் ஊடக ஆலோசகரமான காடீர் ஜாசின் மறைமுகமாக சாடியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!