Latestமலேசியா

கிளந்தான் மந்திரி பெசாருக்கான ஆடம்பர காருக்கான நிதி பிரதமர் துறையிடமிருந்து பெறப்பட்டது அல்ல

பெட்டாலிங் ஜெயா, ஜன 16 – கிளாந்தான் மந்திரி பெசாருக்கும் மற்றும் அவரது ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் புதிய ஆடம்பர கார்களை வாங்குவதற்கு பிரதமர் துறையிடமிருந்து பெறப்பட்ட ரிம 40 கோடி ஒதுக்கீட்டை பயன்படுத்தியதாக கூறப்படுவதை கிளாந்தான் அரசாங்கம் மறுத்துள்ளது.

உயர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ கார்களை மாற்றுவதற்கு 2018 ஆண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பண ஒதுகீட்டை மாநில அரசாங்கம் ஒதுக்கி வைத்திருந்ததாக கிளாந்தான் மந்திரி பெசார் அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ DV 1 வாகனம், மறைந்த முன்னாள் மந்திரி பெசாரிடமிருந்து கிடைக்கப்பெற்று கடந்த 12 ஆண்டு காலாமக பயன்படுத்தி வந்தாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, கிளந்தான் அரசாங்கம்  மந்திரி புசார் மற்றும் அவரது ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் ரிம 70 கோடி மதிப்பிலான மெர்சடிஸ் பென்ஸ் (Mercedes Benz) கார் வாங்கிக் கொடுத்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சயை ஏற்படுத்து உள்ளது.

மேலும், கிளாந்தான் அரசாங்கம் பணம் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் தருணத்தில்  உயர் அதிகாரிகளுக்கு ஆடம்பர கார் வாங்கிக் கொடுத்துள்ளது  என கிளாந்தான் பக்காத்தான் ஹராப்பான் கட்சித் தலைவர் ஹுசாம் முசா குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!