Latestமலேசியா

கார் தீப்பற்றியது : 3 வயது குழந்தையும் தந்தையும் கருகி மரணம்

பினாங்கு, ஜன 31 –  இன்று விடியற்காலையில் நிகழ்ந்த விபத்திற்குப் பின் வாகனம் தீப்பிடித்ததைத் தொடர்ந்து 3வயது பெண் குழந்தையும் அதன் தந்தையும் கருகி மாண்டனர். பினாங்கு பெர்தாமிற்கு அருகே வடக்கு –தெற்கு நெடுஞ்சாலையில் இளம் தம்பதியரும் அவர்களது குழந்தையும் பயணம் செய்த தோயாத்தா வெல்பயர் வாகனம் சாலை தடுப்பில் மோதிய பின் தீப்பற்றியதில் அந்த வாகனத்தை ஓட்டிய 23 வயதுடைய யீப் பூன் குவான் மற்றும் அவரது மகள் யீப் ஜிங் சுவான் மாண்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இன்று காலை 10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பூன் குவானின் மனைவி சான் சீன் யீ (வயது 29) சொற்ப காயத்தோடு உயிர்பிழைத்தார். கடுமையாக மோதப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தால் அந்த வாகனம் தீப்பற்றியதாக நம்பப்டுகிறது.

இந்த விபத்தைப் பார்த்து இதர வாகன ஓட்டுனர்கள் உதவ முயன்றனர். பஸ் ஓட்டுனர் ஒருவர் தீயைணைக்கும் சாதனத்தை பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றதாகவும் ஆனால் தீ வேகமாக பரவியதால் அந்த முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லையென கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!