Latestமலேசியா

காய்கறிகள் விலை 70 விழுக்காடு உயர்வு

கோலாலம்பூர், ஜன 17 – காய்கறிகளின் விலை 20 முதல் 70 விழுக்காடுவரை அதிகரித்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. விரைவில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் சிவப்பு மிளகாய், பயிற்றங்காய், வெண்டைக்காய், தக்காளி ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹிடின் அப்துல் காதர் தெரிவித்தார்.

அடுத்துவரும் வாரங்களில் காய்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என சில வினியோகிப்பாளர்களும் மொத்த விற்பனையாளர்களும் எச்சரிக்கை விடுத்திருப்பதாக சில வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன் ஒரு கிலோ 10 வெள்ளியாக விற்கப்பட்ட சிவப்பு மிளகாய் தற்போது ஒரு கிலோவுக்கு 14 வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது. அதே போன்று ஒரு கிலோவுக்கு 6 வெள்ளிக்கு விற்கப்பட்ட பயிற்றங்காய் இப்போது ஒரு கிலோவுக்கு 10 வெள்ளியாகவும் வெண்டைக்காய் 8 வெள்ளியிலிருந்து 10 வெள்ளியாகவும் தக்காளி 3வெள்ளி 50 காசிலிருந்து 6 வெள்ளியாகவும் விலையேற்றம் கண்டிருப்பதாகவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுட்டிக்காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!