Latestஉலகம்

காபுல் சீக்கியர் ஆலயத்தில் துப்பாக்கிக்காரன் தாக்குதல்; 25 பேர் பலி

காபுல், மார்ச் 26 – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் சீக்கியர்களின் ஆலயமான குர்துவாராவில் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். காலையில் அந்த ஆலயத்தின் வளாகத்தில் புகுந்த அந்த துப்பாக்கிக்காரன் அங்கு வழிபாட்டுக்கு வந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

எனினும் பாதுகாப்பு படைகளுடன் நடந்த சண்டைக்குப் பிறகு அந்த துப்பாக்கிக்காரன் சுட்டுக்கொல்லப்பட்டான். ஷோர்பஷார் வட்டாரத்தில் உள்ள அந்த ஆலய வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டபோது அங்கு சுமார் 150 பேர் சிக்கிக்கொண்டனர், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதக் கும்பல் ஒன்று பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் இதர சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்தவர்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு தங்களுக்கு தொடர்பு இல்லையென ஆப்கானிஸ்தானின் முக்கிய தீவிரவாத தரப்பான தலிபான் தெரிவித்தது.

வழக்கமான பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் 150 பேர் அந்த ஆலய வளாகத்திற்குள் இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான அனார்கலி கவுர் தெரிவித்தார்.
தற்கொலைப் படையைச் சேர்ந்த மூன்று நபர்களும் அந்த ஆலயப் பகுதியில் புகுந்தாக மற்றொரு சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான நரேந்தர் சிங் கைலாசா கூறினார். ஆப்கானிஸ்தான் குறைந்தது 10,000 சீக்கியர்கள் உள்ளனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!