Latestமலேசியா

கல்வி அமைச்சுக்கு வருகை புரிந்த இடைக்கால கல்வி அமைச்சர் மகாதீர்

புத்ராஜெயா, ஜன 16 – இடைக்கால  கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ள பிரதமர் மகாதீர் இன்று மதியம் 2.40 மணியளவில் கல்வி அமைச்சுக்கு வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்ற தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் முகமட் கசாலி மற்றும் துணைக்கல்வி அமைச்சர் தியோ நீ சிங் ஆகிய இருவரும் பிரதமர் மகாதீருக்கு அவரது அலுவலகத்தில் விளக்கமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கல்வி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் குறுகிய சந்திப்பை நடத்தினார்.ஜனவரி 2ஆம் திகதி டாக்டர் மஸ்லி மாலிக் கல்வி அமைச்சராக பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜனவரி 3ஆம் திகதியிலிருந்து பிரதமர் மகாதீர் இடைக்கால கல்வி அமைச்சராக பதவியேற்றார். 
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!