Latestமலேசியா

கலைமுகிலன் மீதான  6 குற்றச்சாட்டுக்கள் உயர்நீதிமன்றத்தில் கூட்டாக விசாரணை 

கோலாலம்பூர், ஜன 20 – தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்  தொர்பான புத்தகம் வைத்திருந்தது உட்பட கலைமுகிலனுக்கு எதிராக  ஆறு குற்றச்சாட்டுக்களை கூட்டாக விசாரணை நடத்துவதற்கு  உயர் நீதிதிமன்றம் இன்று  இணக்கம்  தெரிவித்தது. அனைத்து  வழக்குகளையும்  கோலாலம்பூர்  உயர் நீதிமன்றத்தில்   செவிமடுப்பதற்கான  தேதியை முடிவுசெய்வதற்கு  அடுத்த மாதம்  11ஆம்  தேதியை நீதிபதி   அஸ்லாம் ஜைனுடின்  நிர்ணயித்துள்ளதாக கலைமுகிலனின் வழக்கறிஞர் டி.ராஜசேகரன் தெரிவித்தார்.

கலைமுகிலன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும்  கூட்டாக விசாரணை நடத்துவதற்கு  அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில்  விண்ணப்பித்துள்ளார். இதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என  ராஜசேகரன்  கூறினார். இந்த விசாரணைக்கான தேதி பிப்ரவரி 11 ஆம் தேதி நீதிமன்றம் முடிவு செய்யும் என  அவர் சொன்னார்.  அதோடு  கலைமுகிலனுக்கு ஜாமின் பெறுவதற்கான  மனுவும் தாக்கல் செய்யப்படும் என ராஜசேகரன் கூறினார்.
பழைய உலோக மறுசுழற்சி பொருள் விற்பனையாளரான கலைமுகிலன்  ரவாங் , புக்கிட்  செந்தோசாவிலுள்ள வீடு  மற்றும் காரில் தமிழ ஈழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஆவணங்களை வைத்திருந்ததாக  கடந்த அக்டோபர் 29ஆம் தேதி   செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுக்கள்  கொண்டுவரப்பட்டது.  29 வயதுடைய கலைமுகிலன் மீதான வழக்கை   உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு   செஷன்ஸ் நீதிமன்ற   நீதிபதி   மஷியா  முகமட்  தவ்டி அனுமதித்தார். தண்டனைச் சட்டத்தின்  130 JB (1) (a) விதியின் கீழ்அவர் மீது  குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதவிர  தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்  வி. பிரபாகரன் தொடர்பான புத்தகம் ஒன்றை வைத்திருந்தது,  முகநூலில்  விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை பதிவேற்றம் செய்தது  குறித்த  இதர நான்கு குற்றச்சாட்டுக்களையும கலைமுகிலன்  எதிர்நோக்கியுள்ளார். கலைமுகிலனுக்கு எதிரான குற்றச்சாடு தெளிவின்றி இருப்பது குறித்தும் தாம் ஏமாற்றம் அடைவதாக ராஜசேகரன்  கூறினார்.

கலைமுகிலன் தவிர  சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  எஸ்,தீரன். எம் .பூமுகன் மற்றும் எஸ் .தனகராஜ் ஆகியோருக்கும் ம..இ.கா ஏற்பாட்டில இலசவமாக வழக்கறிஞர் சேவை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக    2012ஆம் ஆண்டின்   சொஸ்மா எனப்படும்  பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் டி.ஏ.பியின் இரண்டு  சட்டமன்ற உறுப்பினர்களான  குணசேகரன் மற்றும்  சாமிநாதன் உட்பட   12பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!