Latestமலேசியா

கருப்பு காலணி – பள்ளிகளின் கருத்துக்களை கல்வி அமைச்சு திரட்டுகிறது

கோலாலம்பூர், ஜன 15 – மாணவர்களுக்கான கருப்பு நிற காலணி மற்றும் காலுறை அமலாக்கம் தொடர்பாக   பள்ளிகளின்  கருத்தை இப்போது கல்வி அமைச்சு பெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள்  இந்த கருத்தாய்வு குறித்து பதில் வழங்கும்படி பள்ளிகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின்  தினசரி பள்ளி நிர்வாகப் பிரிவின்  தலைமை இயக்குனர் டத்தோ முகமட் ஜாமல்  முகமட்டை மேற்கொள் காட்டி கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்ற்றிக்கையில் இது குறித்த தகவல்கள் இடம்பெற்றன.

கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதிமுறையின் அமலாக்கத்தின்  பயன் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதால்  பள்ளிகளின்  கருத்துக்களையும்  கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டது.
கருப்பு  நிற காலணி மற்றும் காலுறைகள் தொடர்பான  அமலாக்கம் குறித்து பள்ளிகளின்  கருத்துக்கள்  அவசியம் தேவையென  அமைச்சு   கருதுகிறது. எனவே இந்த கருத்தாய்வுக்கான  பதில்களை  பள்ளிகள் விரைந்து அனுப்ப வேண்டுமென  கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!