Latestமலேசியா

கணிதம் –அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிப்பதா? அடுத்த ஆண்டு முடிவு எடுக்கப்படும் மகாதீர் நம்பிக்கை

லங்காவி, பிப் 15  – கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதை மீண்டும் அறிமுகப்படுத்துவதா அல்லது இல்லையா என்பது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும் என பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு துணை குழு ஒன்றை அரசாங்கம் அமைத்திருப்பதாக இடைக்கால கல்வி அமைச்சருமான மகாதீர் கூறினார். இவ்விரு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிப்பதை மீண்டும் அறிமுகப்படுத்துவதா அல்லது அதனை தொடர்ந்து தேசிய மொழியிலேயே போதிப்பதா என்பது குறித்து அமைச்சரவை உறுதிப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை மீண்டும் ஆங்கிலத்தில் போதிப்பது குறித்து அறிவிக்க வேண்டாமென கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் இதற்கு முன் நான் கூறியிருந்தேன். ஆனால் எப்படியோ இந்த தகவல் கசிந்துவிட்டது. இவ்விரு பாடங்களையும் மீண்டும் ஆங்கிலத்தில் போதிப்பற்கு தாம் முடிவு செய்துவிட்டதாக பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் நான் முடிவு எடுக்க முடியாது. அமைச்சரவைதான் முடிவு எடுக்க முடியும் என செய்தியாளர்களிடம் பேசியபோது மகாதீர் கூறினார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை மீண்டும் ஆங்கிலத்தில் போதிப்பதை அறிமுகப்படுத்துவது அமைச்சரவையின் பெரும்பான்மை முடிவைப் பொறுத்தே அமையும் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!