Latestமலேசியா

கட்டுபடுத்தப்பட்ட நடமாட்ட உத்தரவு குறித்த கடுமையான வழிகாட்டியை NSC சனிக்கிழமை வழங்கும்

கோலாலம்பூர், மார்ச் 26 – அமல்படுத்தப்பட்டு வரும் கட்டுபடுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவு குறித்த கடுமையான வழிகாட்டியை எதிர்வரும் சனிக்கிழமை தேசிய பாதுகாப்பு மன்றம் வழங்கவுள்ளது.

தேவையான பொருட்களை வாங்க வெளியே செல்பவர்களுக்கும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கொப் அறிவித்துள்ளார்.
கோவிட்-19 வைரஸ் பரவலை துடைத்தொழிக்கும் நமது நோக்கத்திற்கு இந்த வெளியே நடமாடுவதற்கான உத்தரவுக்கு  கடுமையான விதிமுறைகள் வரையறுக்கப்படும். தற்போது ஏப்ரல் 14ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் நடமாட்டம் குறித்த உத்தரவு மேலும் நீட்டிக்கடுமா இல்லையே என்பது மக்களின் கைகளில் உள்ளது.

இன்னமும் 5 விழுக்காட்டு மக்கள் இந்த உத்தரவை மதிக்காமல் வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!