Latestமலேசியா

கடலில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்கள் மீட்பு

டுங்குன், ஜன 19 – கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட சுல்தான் மிஸான் ஸைனால் அபிடின் தொழில்நுட்ப கல்லூரியின் நான்கு மாணவர்களின் உடல்கள் மீட்புக் குழுவினரால் இன்று மீட்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை தெலுக் பிடாரா கடற்கரைப்பகுதியில்  குளித்துக் கொண்டிருந்த போது அந்த மாணவர்கள்  அலையினால் அடித்துச் செல்லப்பட்டனர்.அந்த கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைல்களுக்கு அப்பால் இன்று மாலை 3 மணி அளவில்
முகமட்  அமீர் இசுடின் உடலை
மீட்புக்குழுவினர் மீட்டனர்.

மலாக்காவைச் சேர்ந்த முகமட் அமிர்  சீலாட் வீரரும் ஆவார். இவர் மாநில குழுவிலும் பிரதிநிதித்து சீலாட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

கோலா திரங்கானுவைச் சேர்ந்த முகமட் இக்வான் அகமட் உடல் இன்று காலை மணி 11 .35 அளவில் தெலுக் லீப்பாட் கடல் பகுதியில் மீனவர்களால் மீட்கப்பட்டது. அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால்   30 நிமிடங்களுக்குப் பிறகு  குவந்தானைச் சேர்ந்த முகமட் லுக்மான்  அல் ரஷிட்டின் உடல்  மிகுந்து கொண்டிருப்பதை‌ மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.

இன்று காலை மணி 7.30 அளவில் கெமமானைச் சேர்ந்த முகமட் சுல்ஃபாமி சுகி  என்ற மாணவரின் உடல் மாயாங் சாரி உல்லாச தல கரையோரப் பகுதியில் மிதந்து கொண்டிருப்பதை மீட்புக்குழுவினர்  மீட்டனர்.

21 வயதுடைய அந்த நான்கு மாணவர்களும் வெள்ளிக்கிழமை மாலை மணி  6.30 அளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அலையினால் அடித்துச் செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!