Latestவிளையாட்டு

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை ஜப்பான் இழக்கக்கூடும்

தோக்கியோ, மார்ச் 4 – கோவிட் -19 வைரஸ் ஜப்பானில் தொடர்ந்து பரவி வருவதால் அந்நாடு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை இவ்வாண்டு இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

இவ்வாண்டுக்குள் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாவிட்டால் போட்டியை நடத்துவதற்கான குத்தகையை ஜப்பான் இழந்து விடும் என அந்நாட்டின் ஒலிம்பிக் அமைச்சர் செய்கோ ஹஷிமோட்டோ கூறினார்.

ஒலிம்பிக் போட்டியை இவ்வாண்டு திட்டமிட்டபடி ஜூலை 24-ஆம் தேதி நடத்துவதற்கு ஜப்பானும் அனைத்துலக ஒலிம்பிக் மன்றமும் திட்டமிட்டிருந்தன.

ஆனால் கோவிட் -19  உயிர்கொல்லி இதுவரை 76 நாடுகளில் பரவி இருப்பதோடு 3,116 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதனால் பல நாடுகள் தங்களது விளையாட்டாளர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்.

இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி தோக்கியோவில் நடைபெறுமா என்பது மே மாதம் தெரிந்துவிடும். இப்போட்டியை நடத்துவதா இல்லையா என்பதை ஜப்பான் தெரிவிப்பதற்கான கால அவகாசம் மே மாத இறுதியில் முடிவடைகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!