Latestமலேசியா

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் பலி

சுங்கை சிப்புட், பிப் 14 – 37 கிலோ மீட்டர்  ஜாலான் ஈப்போ -கோலாகங்சார் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு 10 மணியளவில் புரோட்டோன் சாகா காரும டிரெய்லர் லோரியும் மோதிக் கொண்டதில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் சுங்கை சிப்புட் குற்றப்புலனாய் துறையின் Lans Koperal  28 வயது Mohamad Faiz Bakhri, மனைவி 30 வயது Nik Idayu Nik Hasan, 2 வயது மகன் Mohammad Faqih Irshad Mohamad Faiz மற்றும் 28 வயது கார் ஓட்டுனரின் உறவினர் Nik Ifieka Nik Hassan, வயது 28 ஆகிய நால்வரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அக்காரில் பயணித்த அவரகளின் மூத்த மகனான  3 வயது Mohammad Fariz Iskandar Mohamad Faiz காயத்திற்கு உள்ளாகி ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்  இரவு உணவு உண்ட பின் கோலாகங்சாரை நோக்கி  பயணித்த அவர்களின் கார் எதிரே வேக கட்டுப்பாட்டை இழந்து வந்துக் கொண்டிருந்த  டிரெய்லர் லோரியுடன் மோதியத விசாரணையில்  தெரிய வந்துள்ளதாக சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் அதிகாரி முகமட் கைசாம் தெரிவித்தார்.

இதனிடையே, 26 வயது டிரெய்லர் ஓட்டுனரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் கைசாம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!