Latestஇந்தியாஉலகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலை – உத்தார் பிரதேசத்தில் பயங்கரம்

உத்திர பிரதேசம், டிச 3-   இந்தியா உத்திரப் பிரதேச மாநிலத்தின் இந்திரப்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

காசியாபாட் மாவட்டத்தின் இந்திரப்புரம் என்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  தன் இரு மகள்களை தூங்கும்போது கொலை செய்துவிட்டு ஒரு ஆடவனும் இரு பெண்மணிகளும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியிலிருந்து குதித்ததில் மூவரில் இருவர் உயிரிழந்ததோடு ஒருவர் கடுமையான காயத்திற்கு உள்ளாகி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் நிதி பிரச்சனையாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், வீட்டின் வளர்ப்பு பிராணியான முயலும் இறந்து கிடக்க காணப்பட்டது. காலை மணி 5 அளவில் மிகப்பெரிய சத்தம் கேட்டு பாதுகாவலர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.உயிர் பிழைத்த பெண் இறந்த ஆணின் இரண்டாவது மனைவி என்று சொல்லப்படும் சமயத்தில் இன்னொரு தகவல் வர் அந்த வீட்டில் வேலை செய்பவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இறந்தவர், வர்த்தக பங்காளியான தனது உறவினரிடம் பெரிய தொகைக் கொண்ட பணத்தை ஏமாந்ததாக தகவலும் கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!