Latestஉலகம்

ஐநா மன்றத்தின் 43 வது கூட்ட தொடரில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார்

ஜெனிவா, மார்ச் 25 – ஜெனிவாவில் உள்ள ஐநா மன்றத்தின் 43வது கூட்ட தொடரில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் நம் தமிழ்மொழி, கலை, கலாச்சாரங்கள் அனைத்து நாடுகளிலும் பின்பற்ற ஐநா உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் உலகெங்கும் உள்ள மக்கள் தம் தாய்மொழியில் கல்வி கற்க அரசாங்கங்கள் உதவி செய்ய வேண்டும் எனவும், தமிழ் கலாச்சாரங்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உதவி செய்யவேண்டும் என செல்வகுமார் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் ஐநா சபையின் 43 வது கூட்டத் தொடரில் கலந்துக் கொண்ட தமிழகத்தை சேர்ந்த நீரிழிவு விழிப்புணர்வில் 7 முறை கின்னஸ் சாதனை செய்த மருத்துவர் சத்திய நாராயணன் இந்த போரினால் பாதிக்கப்படும் சிறார்களின் மனநிலையை பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். உலகத்தில் எங்குமே போர் இல்லாத சூழ்நிலையை உருவாக்க ஐநா உதவி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!