Latestமலேசியா

ஏபெக் மாநாட்டிற்குப் பின்னர் பதவி விலகுவேன் –  மகாதீர்

கோலாலம்பூர்,  பிப் 14 – முழு தவணை வரை தாம் பதவியில் இருப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தை  எதிர்க்கட்சிகள் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு இருந்தாலும் நவம்பர் மாதம்  ஏபெக் உச்ச நிலை  மாநாடு முடிவுற்ற பின்னர்  பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதை டாக்டர் மகாதீர் இன்று மறு உறுதிப்படுத்தினார்.

அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் நேற்று தாம் நடத்திய சந்திப்பில் விவாதிக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார்.

அன்வார் என்னைச நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை சரியானது என மகாதீர் தெரிவித்தார்.

எந்தவித நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை.  ஏபெக் உச்சநிலையை மாநாட்டிற்குப் பிறகு நான் பதவி  விலகுவேன் என வாக்குறுதி வழங்கியுள்ளேன். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன் என லங்காவி தீவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் மகாதீர் கூறினார்.

நீண்ட நாள் பதவியிலிருக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் தமக்கு தொடர்பில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தில் டாக்டர் மகாதீர் தலைமைத்துவத்திற்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை சமர்ப்பிக்க போவதாக பாஸ் கட்சி கூறியுள்ளது.

நேற்று புத்ரா ஜெயாவில் பிரதமரை சந்தித்த அன்வார் அதிகார ஒப்படைப்பு திட்டம்  குறித்து அடுத்த வெள்ளிக்கிழமை  நடைபெறும் நம்பிக்கை கூட்டணி தலைமைத்துவ மன்றம் விவாதிக்கும் என்று தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!