Latestவிளையாட்டு

எவர்ட்டன் நிர்வாகி ஆகிறார் கார்லோ அன்செலோத்தி ?

லண்டன், டிச 13 – இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் எவர்ட்டன் அணி விளையாடி வருகிறது. எவர்ட்டன் அணி லிவர்பூல் அணியின் பரம வைரீகளாக காற்பந்து ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எவர்ட்டன் அணியின் புதிய நிவாகியாக கார்லோ அன்செலோத்தி நியமிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர் எவர்ட்டன் அணியின் உரிமையாளரைச் சந்தித்கவுள்ளார்.

அடுத்த பருவத்தில் எவர்ட்டன் அணி ஐரோப்பிய வெற்றியாளர் லீக் ஆட்டத்தில் விளையாட முதல் நான்கு இடங்களைப் பெற போராடி வருகிறது. தற்போது எவர்ட்டன் அணியை மார்கோ சில்வா வழிநடத்தி வருகிறார். அவருக்கு மாற்றாக கார்லோ அன்செலோத்தி நியமிக்கப்படலாம் என ஆரூடமும் வலுத்துள்ளது. இதற்கு முன் கார்லோ அன்செலோத்தி செல்சி மற்றும் ஏ.சி. மிலான் கிளப்புகளை வழிநடத்தி வந்தார் என்பது குறுப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!