Latestமலேசியா

எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சந்தேகப் பேர்வழி உக்ரேய்ன் திரும்ப அனுமதிப்பதா?

தெ ஹெக்   அக் 3  எம்.எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை உக்ரேன் திரும்புவதற்கு ரஷ்யா அனுமதி அளித்ததாக நெதர்லாந்து குற்றம்சாட்டியுள்ளது. அந்த சந்தேகநபரை நாடு கடத்த வேண்டும் என்ற உடன்பாட்டை மீறி ரஷ்யா இவ்வாறு செய்திருப்பதாக நெதர்லாந்து தெரிவித்துள்ளது.

மாஸ்கோ ஆதரவான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான வான்வெளி தற்காப்பு நிபுணர் விலடிமர் செமாக் உட்பட 12 கைதிகளை ரஷ்யாவும்  உக்ரேய்னும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளன.

தங்களுக்கு இடையிலான ஐந்து ஆண்டுகால நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் முதல் நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் அவ்விரு நாடுகளும் கைதிகளுக்கான பரிமாற்றத்தை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014 ஆம் ஆண்டில் மலேசிய விமான நிறுவனத்தின்  MH 17 விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு நெதர்லாந்து கோரிக்கை எழுப்பி இருந்தது.

ஆனால் இதனை ரஷ்யா கண்டுகொள்ளாமல் விலடிமர் தாமக்கை கிழக்கு உக்ரைனில் உள்ள அவரது இல்லத்திற்கு ரஷ்யா அனுப்பி வைத்தது குறித்து தாங்கள் ஏமாற்றம் அடைவதாக நெதர்லாந்து தெரிவித்தது.

குற்றவாளிகளை வெளியேற்றும் ஐரோப்பிய சாசனத்தின் கீழ் நெதர்லாந்தின் கோரிக்கையை ஏற்று mh17 விமானத்தை சுட்டு வீழ்த்திய சந்தேகப் பேர்வழிகளை ரஷ்யா தங்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.  ஆனால் ரஷ்யா இதனை மறுத்ததுவிட்டதாக நெதர்லாந்து அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு பயண சேவையில் ஈடுபட்டிருந்த mh17 விமானத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் எறிபடை சுட்டு வீழ்த்திய சம்பவத்தில் நான்கு சந்தேக பேர்வழிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!