Latestமலேசியா

என் மீது வழக்கு பதிவா? கொண்டு வாருங்கள் – யூசோப் ராவுத்தர்

பெட்டாலிங் ஜெயா, ஜன 17 – தான் ஓரிணப் புணர்ச்சி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது குற்றம் சாட்டிய யூசோப் ராவுத்தர் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் முடிவில் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறியுள்ளார். அன்வார் தன் மீது வழக்கு பதிவு செய்யவுள்ளாரா? செய்யட்டும். நான் அதற்காக அஞ்சவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞருடன் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, யூசோப் ராவுத்தர் இதனைத் தெரிவித்தார். என்ன நடந்தாலும் சரி, இதன் முடிவை நான் சந்திக்க விரும்புகிறேன். நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன்” என ராவுத்தர் கூறியுள்ளார்.

சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் தலைமை வழக்கறிஞர் Engku Nor Faizah வெளியிட்ட அறிக்கயில் சில சில சந்தேகங்கள் இருக்கின்றன.  அதை தெளிவுப்படுத்த அவருடனான ஒரு சந்திப்புக்கு நாங்கள் ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம் என யூசோப் ரவுத்தரின் வழக்கறிஞர் ஹனிப் கத்ரி கூறினார்.

அதற்கான பதிலை இன்று முதல் 7 நாட்களுக்குள் கூற வேண்டும் என நாங்கள் கேட்டுள்ளோம். ஆக ஜனவரி 24ஆம் தேதிக்குள் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்கிறோம். Engku Nor Faizahவின் விளக்கம் மிகவும் முக்கியமானது. அது பொருத்தே யூசோப் ராவுத்தரின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என ஹனிப் கத்ரி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!