Latestசினிமா

என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்- ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு

சென்னை, நவ 30 –  நடிகர் தனுஷ் – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இந்த திரைப்படத்திற்கு டர்புகா சிவா இசையமைத்துள்ளார். மிகப்பெரிய சிக்கல்களுக்குப் பிறகு நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம்  மிக தாமதமாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் சென்னையில் மட்டும் 74 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது இந்த படம். மேலும், அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே ஓடிகொண்டிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் வார இறுதி நாட்களில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின்  வசூல் அதிகரிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!