Latestமலேசியா

எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் – அன்வார்

ஷா  அலாம்.   நவ 24 – தமக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என பி கே ஆர் தலைவர் டத்தோஸ்ரீ  அன்வார் கூறியுள்ளார்.  அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டால்  அதனை ஏற்பீர்களா என வினவப்பட்டபோது அப்படியொரு திட்டம் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லையென  அன்வார் தெரிவித்தார்.

ஷா அலாமில்  ரிபோமாஸி எனப்படும்  சீரமைப்பு மாநாட்டை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது‌ அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இதனிடையே அதிகாரப் பரிமாற்றம் குறித்த விவகாரத்தை எழுப்புவதில்  பி.கே.ஆர் ஆர் உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்  அன்வார் கேட்டுக் கொண்டார்.

அதிகாரம் பரிமாற்றம் சிறந்த முறையில் நடைபெறுவதை பிரதமர் டாக்டர் மகாதீரிடம் விட்டுவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நம்பிக்கை கூட்டணியின் தலைவர் மன்றம்தான்  எட்டாவது பிரதமராக வருவதற்கு யார் த‌‌குதியானவர் என்பதை உறுதி செய்யும் என்றும் அன்வார் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!