Latestமலேசியா

எண்ணெய் நிலையத்தை மோதிய கார் : பிரேம் ஜெயபால் & கதிரவன்  மாண்டனர்

ஜொகூர் பாரு, ஜன 4 – தாங்கள் பயணம் செய்த கார் கவிழ்ந்து பெட்ரோல் நியைத்திலுள்ள  எண்ணெய்  குழாயில் மோதியதில்  இருவர்  மாண்டதோடு மேலும் ஒருவர் காயம் அடைந்தார். கம்போங் மெலாயு பண்டானில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 32 வயது பிரேம் ஜெயபால் மற்றும்  அக்காரின் முன்புறம் அமர்ந்திருந்த 33 வயது   எஸ். கதிரவன்  ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று காலை 6.26 மணியளவில்   நிகழ்ந்த இவ்விபத்தில் அந்த காரின் பின்புறம் அமர்ந்திருந்த 21 வயது பயணி  லிம் வெய் சி என்பவர் தலையில் காயங்களுடன் உயிர்தப்பியதாக போலிசார் தெரிவித்தனர்.
பண்டானிலிருந்து   கோத்தா திங்கியை நோக்கி   பயணம்  செய்த  கருப்பு நிற ஹோன்டா  சிட்டி கார்  ஒரு வளைவில் கவிழ்ந்து  சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதிய பின் பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்தது. அதன் பின்  அந்த கார் உருண்டு  பெட்ரோல் பம்ப் சுவரில் மோதியுள்ளது.

இதில் பிரேம் ஜெயபால் காரிலிருந்து வெளியே  தூக்கிவீசப்பட்டு ஓட்டுனரின் கதவுக்கு அருகே சிக்கிக்கொண்டதால் இறந்துள்ளார்.  கதிரவன்   ஓட்டுனர் இருக்கைக்கும் முன்புற பயணி இருக்கைக்கும்  நடுவில் சிக்கிக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!