Latestவிளையாட்டு

ஊக்க மருந்து விவகாரம் மலேசியா ஓட்டப்பந்தய வீரருக்கு 4ஆண்டு தடை

கோலாலம்பூர் ஜன 25 தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தொடர்பில் 17 வயதுடைய மலேசிய ஓட்டப்பந்தய வீரர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மலேசிய பொது ஓட்டப்பந்தய போட்டியில் அந்த ஓட்டப்பந்தய வீரர் ஊக்க மருந்தை பயன்படுத்தியிருக்கிறார்  என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து தெரிவித்தார்.

ஜோகூரை சேர்ந்த அந்த ஓட்டப்பந்தய வீரர் பினாங்கிலுள்ள தனது நண்பர் வழங்கிய சத்துணவு மருந்தில் தடைசெய்யப்பட்ட அந்த ஊக்க மருந்து இருந்துள்ளதை உணராமலேயே இதனை அந்த ஓட்டப்பந்தய வீரர் இரண்டு ஆண்டுகாலம் பயன்படுத்தியிருக்கிறார்.

ஓட்டப்பந்தய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதை யமலேசிய ஓட்டப்பந்தயம் கடுமையாக கருதுவதாக முத்து கூறினார். சம்பந்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தய வீரர் முறையீடு செய்வதற்கு 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சத்துணவில் ஒரு அங்கமாக அவர் அந்த ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பதாக மலேசிய ஒலிம்பிக் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முத்து கூறினார்.

அந்த மாணவன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற றமலேசிய ஓட்டப்பந்தயபோட்டியில் நான்கு பேர் கலந்து கொண்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஓடியபோது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருக்கிறார் என்று தெரியவந்தது. ய இந்த விவகாரத்தில் அந்த மாணவரின் பயிற்சியாளரும் ரதவறு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் சொன்னார்.

அந்த மாணவரின் பயிற்சியாளரிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். எனினும் அவரை குறை கூறுவதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என முத்து தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!