Latestமலேசியா

உல்லாச கப்பலின் நீச்சல் குளத்தில் சிறுவன் ‌மரணம்

லங்காவி, நவ 19-ஸ்டார் க்ரூஸ் படகுத்துறையில் நங்கூரமிட்டிருந்த உல்லாசக் கப்பலின்‌  நீச்சல் குளத்தில் மூழ்கி சிங்கப்பூர் சிறுவன் ஒருவன் இறந்து கிடந்தான்.நேற்று பிற்பகலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் தெரிவித்தார்.
தனது தாயார் மற்றும் நண்பரின் தாயாருடன் விடுமுறையை கழிப்பதற்காக   ஹெச் காய் லுன்  என்ற 10 வயது சிறுவன் அக்கப்பலில் பயணம் செய்ததாக‌ கூறப்பட்டது. இவர்கள் பயணம் செய்த அந்த உல்லாசக் கப்பல் நேற்று பிற்பகலில்    லங்காவி வந்தடைந்ததாக முகமட் இக்பால் கூறினார்.
 அந்தக் கப்பலில் நீச்சல் குளத்தில் சிறுவன் ஒருவன் இறந்து கிடப்பதாக இரவு மணி  7.30 அளவில் பாடாங் மாஜிஸ்திரேட் போலீஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக அவர் கூறினார் .
கப்பலின் மேல்  தளத்தில் நீச்சல் குளத்தில் தனியாக ய்யயய்குளித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் மூழ்கி விட்டதாக தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோதுநீச்சல் குளத்தின்
 பாதுகாவலர் அங்கு இருந்ததோடு அந்த கப்பலை சேர்ந்த இதர பயணிகளும் அந்த நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் எனினும் அந்த சிறுவனை அவர்கள் காப்பாற்ற தவறிவிட்டதாக இக்பால் கூறினார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு நீச்சல் குளத்தின் பாதுகாவலரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ததாக நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இக்பால் தெரிவித்தார்.
அந்தச் சிறுவனின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக லங்காவி சுல்தானா  மலிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கப்பல் ஊழியர்களுடன் 3000 பயணிகளை ஏற்றிவந்த அந்த உல்லாச கப்பல் நேற்று இரவு மணி 10.30 அளவில்  புக்கேட் தீவுக்கான தனது பயணத்தை தொடர்ந்தது.
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!