Latest

உலக மரண எண்ணிக்கை 20,000 ; ஸ்பெய்னில் மரண எண்ணிக்கை 3,434

மெட்ரிட், மார்ச் 25 – ஸ்பெய்னில் கோவிட் -19 வைரஸ் பாதிப்பின் காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை மிஞ்சி 3,234 ஆகியது.
உலகளாவிய நிலையில் இந்த உயிர்க்கொல்லியினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20,000த்தை நெருங்கிய வேளையில் அதிக அளவில் மரணம் அடைந்தவர்களின் நாடுகளில் இத்தாலி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த நிலையில் ஸ்பெய்னும் இப்போது உள்ளன. கடந்த ஆண்டு சீனாவில் தொடங்கிய கோவிட் -19 வைரஸிற்கு அங்கு 3,281பேர் மரணம் அடைந்தனர்.

ஸ்பெய்னில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,610ஆக உயர்ந்தது என ஸ்பெய்ன் அரசாங்கம் அறிவித்தது. ஸ்பெய்னில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் உத்தரவு மார்ச் 14ஆம் தேதி முதல் அமலில் இருந்தபோதிலும் நோய்த் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவது குறித்து ஸ்பெய்ன் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மெட்ரிட் நகரில் மட்டும் 14,587பேர் இந்நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு ஏற்கனவே 1,825பேர் உயிரிழந்துள்ளனர். மெட்ரிட்டிலுள்ள மருத்துவமனைகளில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் நிறைந்துவிட்டதால் இடப்பற்றாக்குறை காரணமாக நடமாடும் மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பணிக்கு பிறகான ஓய்வு இல்லங்களில் இருந்துவந்த பலர் கைவிடப்பட்ட நிலையில் இறந்துகிடந்தது ஸ்பெய்ன் ராணுவ அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தனித்தவிடப்பட்ட நிலையில் அந்த இல்லம் இருந்ததோடு அதனை நடத்தியவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!