Latestவிளையாட்டு

உலகின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டாளர்- 6ஆவது முறையாக மெஸ்ஸி வென்றார்

பாரிஸ், டிச 3- உலகின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டாளர் விருதை பார்சிலோனா கிளப்பின் லியோனல் மெஸ்ஸி 6ஆவது முறையாக வென்றுள்ளார். பாரிசில் நடைப்பெற்ற இந்த விருதளிப்பு விழாவில் அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஜூவந்தஸ் அணியின் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கனவே 5 முறை இவ்விருதை வென்றுள்ளார். அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் 6ஆவது முறையாக மெஸ்ஸி சிறந்த காற்பந்து விளையாட்டாளர் விருதை வென்றிருக்கிறார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன், நான் எனது முதல் பலோன் டி’ஓர் விருதை இங்கு தான் பெற்றதாக   என மிகவும் மகிழ்ச்சியோடு மெஸ்ஸி தெரிவித்தார். என்னால் இன்னும் சிறந்ததொரு ஆட்டத்திற்னைக் கொண்டு வர முடியும் என பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகவும் மெஸ்ஸி மேலும் கூறினார்.

 

 

 

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!