Latestஉலகம்

உலகளாவிய நிலையில் மரண எண்ணிக்கை 21,270 ஆக உயர்வு ; ஐரோப்பாவுக்கு அடுத்து அமெரிக்காவில் வேகமாக பரவுகிறது

லண்டன், மார்ச் 26 – உலகளாவிய நிலையில் கோவிட் -19 தொற்றுக்குள்ளாகி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21,270ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 470,000.

ஐரோப்பாவில் இத்தாலி மற்றும் ஸ்பெய்ன்னுக்கு அடுத்து தற்போது அமெரிக்காவில் கோவிட் -19 வைரஸ் தொற்று மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு மேலும் மோசமடையலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று பரவியதால் அங்கு அடுத்த சில நாட்களிம் மேலும் அதிகமானோர் மரணம் அடையும் வாய்ப்பு இருப்தாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களிலும் 68,000 பேருக்கு இந்த உயிர்க்கொல்லி தொற்று பரவியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க்கில் மட்டும் 30,800 பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 193பேர் கோவிட் -19 தொற்றினால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த தொற்று பரவியது முதல் அங்கு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,024 ஆக அதிகரித்துள்ளது

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!