Latestமலேசியா

உயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்? குவியும் பாராட்டுகள் (VIDEO)

சுங்கை பூலோ, டிச.2 –
உலக மய மாற்றலுக்கு ஏற்ப நாமும் அதற்கு ஈடு கொடுக்க பரபரப்பாக ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த பரபரப்பான சூழலில், நம்மில் பெரும்பாலானோர் நான், எனக்காக, என் குடும்பம் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே நமது அன்றாட வாழ்க்கையை நகர்திக் கொண்டிருக்கிறோம். இதில் சமுதாய சிந்தனை, பொது பாதுகாப்பு, பொதுச்சேவை போன்றவற்றை சிந்திக்கவே நேரமும் இருப்பதில்லை, நேரத்தையும் ஒதுக்குவதுமில்லை.
இப்படிப்பட்ட நிலையில், நேற்று டிசம்பர் 1ஆம் திகதி தன்னலமில்லாமல் இந்திய ஆடவர் ஒருவர் செய்த செயல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பலரின் பாராட்டை பெற்று வருகிறது. சுங்கை பூலோ நெடுஞ்சாலையின் நடுவே விழுந்துக் கிடந்த பெரிய இரும்புக் கம்பிகளை, தன் உயிரை பனையம் வைத்து சாலையைக் கடந்து அதனை அப்புறப்படுத்தியது பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது எனலாம். அந்த ஹீரோவை அடையாளம் காணும் முயற்சியிலும் பலர் இறங்கி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் அந்த நெடுஞ்சாலையில், யாருக்குமே அந்த இரும்புக் கம்பியை அகற்றும் எண்ணம் வராத பட்சத்தில், அப்பொழுதுதான் அங்கு வந்த இந்த நமது ஹீரோ உடனடியாக தனது காரை இடது புறமாக நிறுத்தி, சாலையை கடந்து அந்த இரும்பை தனியாளாக தூக்கிவந்து அகற்றியுள்ளார். இதுகுறித்த காணொளியை சுங்கை பூலோ நெடுஞ்சாலை ஓய்விடப்பகுதியில் உணவு அருந்திக் கொண்டிந்த ஒருவர் வீடியோ காணொளி செய்துள்ளார். அக்காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அவ்வழியே சென்ற அனைத்து வாகனங்களும் அதனைக் கண்டும் காணாதது போல் சுயநலத்திலும், பாதுகாப்பை அஞ்சியும் விலகிச் சென்ற வேளை, பிறரின் பாதுகாப்பை கருதி அவர் செய்த இந்த துணிகரச் செயல் பாராட்டக்கூடியது. ஒருவகையில், இதனால் ஏற்படக்கூடிய விபத்தையும், ஏதோ ஒரு உயிருக்கு ஏற்படவிருந்த ஆபத்தையும் இவர் காப்பாற்றியுள்ளார்.
இவரின் செயலை பாராட்டிய பலர், ஏன் தங்களால் செய்யக்கூடிய சில சின்னஞ்சிறு விஷயங்களையும் செய்யமுடியாமல் அல்லது செய்ய மனமில்லாமல் இருக்கிறோமே என தங்களையே நொந்துக் கொண்டு கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர்.
பல சமயங்களில், இது போன்ற பெயர் தெரியாத சில ஹீரோக்கள் செய்யும் செயல் பலருக்கு படிப்பிணையாக அமைகின்றது என்பதை இந்த இந்திய இளைஞரின் செயல் மூலம் நாம் காணமுடிகிறது. 

இவ்வேளையில், ஒரு உன்னதமான செயலை ஆர்பாட்டமில்லாமல் செய்து முடித்து, தன்னை பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் அந்த இந்திய ஹீரோவிற்கு நமது நன்றியையும் சபாஷும் கொடுப்போம் வாருங்கள். 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!