Latestமலேசியா

உண்மையை கண்டறியும் சோதனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை – அன்வார்

கோலாலம்பூர், ஜன 8 – முன்னாள் ஆய்வு உதவியாளர் தமக்கு எதிராக செய்திருக்கும் பாலியல் புகார் குறித்து போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருதால் போலிகிராப் எனப்படும் உண்மையை கண்டறியும் சோதனைக்கு தாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென  அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த பரிசோதனை மேற்கொள்வதறகு அடிப்படை காரணம் எதுவும் இல்லை.

இதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். இதற்கான தேவையும் உள்ளது என கருதப்பட்டால் போகலாம் என அனைத்துலக மாநாட்டில்  உரையாற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் அன்வார் தமக்கு எதிராக பாலியல் தொல்லை கொடுத்ததாக  அவருக்கு எதிராக   முகமட் யூசோப் ராவத்தர்  புகார் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து  அக்டோபர் 17ஆம் தேதி முகமட் யூசோப்  உண்மையை கண்டறியும சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த பரிசோதனையின் முடிவை போலீசார் இன்னமும் அறிவிக்கவில்லை. இந்த விவகாரத்தை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் போலீசார்  ஒப்படைத்துவிட்டனர். சாட்சியின்  வாக்குமூலம்  இல்லாத  மற்றும்   சம்பவம் குறித்த இடமும் நேரமும்   போன்ற விவரங்கள் இல்லாத நிலையில்  உண்மை கண்டறியும் பரிசோதனை  பயனற்றது என்றும் அன்வார் தெரிவித்தார்.

நான் உங்களைப் பார்த்து திருடுகிறிர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறேன். அதோடு உண்மை கண்டறியும்  சோதனைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று கூறுவது  எந்த வகையில் நியாயம் என்று அன்வார் வினவினார். எனவே இந்த பரிசோதனைக்கு செல்வதற்கு முன் அதற்கு அடிப்படை இருக்க வேண்டும்.
நான் இந்த பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என  போலீசார் எந்தவொரு கோரிக்கையும் இதுவரை எழுப்பவில்லை.

எதற்காக இப்போது  இந்த விவகாரம் எழுப்பப்படுகிறது. தமக்கு எதிரான இந்த குற்றச்சாட்டிற்கு பின்னால் இருப்பவர்களை  தாம் அறிந்திருப்பதாகவும் அன்வார் சொன்னார். இவர்களை பயன்படுத்தும் தரப்பினரையும் நான் அறிவேன். இந்த விவகாரத்தை போலீஸ் கையாளட்டும் என்றும் அன்வார்  கூறினார்.
நான் சுயமாகவே போலீசிற்கு சென்றேன். அவர்களை எனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தேன். அதன்பிறகு அவர்களை பார்க்க போலீஸ் நிலையம் சென்றேன் என்றும் அன்வார்  தெரிவித்தார்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!