Latestமலேசியா

உட்கட்சி பூசல் கட்சி அழிந்து விடும் -அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச.7 – பி.கேஆர் கட்சி தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் கட்சியாக மாறி விடக் கூடாது என இன்று நடக்கும் கட்சியின் பேராளார் மாநாட்டில் அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்தார். மலாக்கா சுல்தான்களின் ஆட்சி கவிழ்ந்த்தை அவர் உதாரணமாக சுட்டிக் காட்டினார். உட்கட்சி மோதல், சதி போன்றவை கட்சியை அழிவு பாதைக்கு இட்டுச் சென்று விடும் என்பதால் ஒழுக்கமும் தலைமைத்துவ சொல்லுக்கு ஏற்ப நடப்பதும் அவசியம் என வலியுறுத்தினார்.

இதனிடையே, கட்சியின் “lawan tetap lawan” எனும் வழக்கமான சுலோகம் நீதிக்கா எத்தருணத்திலும்  போராட்டைத்தைக கைவிடக் கூடாது என்பதே தவிர நண்பர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது அல்ல என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நேற்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு அணிகளுக்கிடையே நடந்த கைகலப்பைத தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். தம்முடைய “மன்னிக்கும்” மனப்போக்கு இது போன்ற சம்பவங்களுக்கம் காரணமாக இருந்ததையும் தாம் உணர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!