Latestமலேசியா

உடம்புப்பிடி பெண் கற்பழிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டார்

கூலாய், நவ. 13 –  சாலெங், ஜாலான் தாம்பானில் காரொன்றில் உடம்புப்பிடி பெண்ணை கற்பழித்து கொள்ளையடித்த 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

34 வயது இந்தோனேசிய பகுதி நேர உடம்புப்பிடி பெண் வீசேட் எனும் இணைய தொடர்பின் மூலம் அறிமுகம் ஆகி அந்த ஆடவரைச் சந்தித்துள்ளார்.

நவம்பர் 8ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இருவரும் சந்தித்து இரவு உணவுக்குச் சென்றனர். அடுத்த நாள் பெண்ணின் வீட்டில் உடம்புப் பிடி சேவையைப் பெற்றுக் கொண்டு, பணம் காரில் இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை காருக்கு அழைத்துச் சென்றான்.

அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்று, ஓர் இடத்தை அடைந்ததும், பாராங் கத்தியைக் காட்டி அவளின் உடமைகளைப் பறித்ததோடு அவளை பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளான்.
அந்தப் பெண் எதிர்த்துப் போராடியபோது, அவளது முகத்தில் குத்தியுள்ளான்.

சாலையில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை  வழிப்போக்கர் ஒருவர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்க உதவியிருக்கிறார்.

போலீசாரின் துரித நடவடிக்கையில் அந்த ஆடவன் தாமான் புத்ரியில் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் கைது செய்யப்பட்டான். அவன் பயன்படுத்திய பாராங் கத்தி கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கு கற்பழிப்பு என வகைப்படுத்தப்பட்டு விசாரணை தொடர்கிறது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!